இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் பிரதேசத்திற்கு அருகே கொத்தனிக் குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டை முன்வைத்துள்ளது.
எனினும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.