கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தின் தென் பகுதியில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தின் தென் பிராந்தியத்திலுள்ள பணிச் சறுக்கு விளையாட்டிற்கு பெயர்போன இடமான ஜீவோன்ட் என்ற மலைப்பகுதியில் பணிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோதே மின்னல் தாக்கியிருக்கின்றது.
காலையில் சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருந்ததால் ஏராளமான பணிச் சறுக்கு வீரர்கள் மலைப்பகுதியில் கூடியிருந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதன்போது மின்னலும் தொடர்ச்சியாக மின்னல் தாக்கியுள்ளதாலேயே நால்வர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டவர்க்ள் காயமடைந்துள்ளதாக போலந்து அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.