போரில் ஈடுபட்ட படையினரை தான் பாதுகாப்பேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்றை தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், படையினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன என குற்றம் சாட்டியிருந்தார்.
அது நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன் என கூறினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கின்றது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய இராணுவத் தளபதி நியமனத்துக்கு சில மேற்குலக நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன என்றும் இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு என்றும் சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ, எந்த வெளிநாடும் இதில் தலையீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.