ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரவு நேர விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
நேற்று இரவு இந்த விருந்துபசார நிகழ்வு சங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விருந்துபசாரத்தில் மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, லசந்த அலகியவன்ன உள்ளிட்ட பலர் கலந்த கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூகம் அளிக்க முடியாத சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் கோட்டபாயவிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறதுடன், இந்த நிகழ்வின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடல்கள பாடி அசத்தியுள்ளதாக தெகவல்கள் வெளியாகியுள்ளன.