இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக பாடசாலைகளின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று ஆசிரியர்கள் தங்களது விடுமுறைக்கான விண்ணப்பத்தினை அனுப்பி வைப்பதற்காக சென்றுள்ள ஆசிரியர்களினால் தபால் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலை நீடிப்பதாக இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் மகேந்திர ஜெயசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த போராட்டத்திற்கு 31 ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
1997இல் தொடங்கிய ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடானது தொடர்ந்த வண்ணமேயுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்விக்கு தேவையான நிதியை ஓதுக்காது பாடசாலையை கொண்டு நடத்தும் செலவு பெற்றோர் மீது திணிக்கப்பட்டுள்ளது.
2016 ஜனவரி 1 இற்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனார்.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக பாடசாலைகளின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.