இந்தியாவின் சென்னை நகரில் போக்குவரத்து பணிமனை விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில், நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த அரச ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் சோதனை செய்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் குறித்த கட்டத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
என்ற போதிலும் செல்லும் வழியில் பாரதி மற்றும் சேகர் ஆகிய இரவர் பரிதாபமாக உயிரழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பாரதி 24 நாட்களுக்கு முன்பு தான் நாகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினால் குறித்த நபரின் ஊர் சொகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.