தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் பரிசோகர் ஒருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பல்வேறு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.