திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் நேற்று மாலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் படி மேற்கொண்ட சோதனையின் போது அனுமதியின்றி கொண்டு சென்ற 50கிலோ மரை இறைச்சியினை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கந்தளாய் வான்எல மற்றும் ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.