இரண்டாம் உலகப் போரின் போது துணிகரமாக போரிட்ட படையினரை நினைவுகூர்ந்து பொலன்னறுவை லக்ஷ உயன கல்காரிய பிரதேசத்தில் இராணுவ நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
ஜனாதிபதி நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, இரண்டாம் உலக யுத்தத்தில் பங்குபற்றி இறந்த மற்றும் உயிர்வாழும் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

