குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போதை கலந்த குடிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏரியுள்ளார்.
இதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் குடிபானம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை குடித்தவுடன் பெண் மயங்கியுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் குடிபானத்தை குடித்தவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.