தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்துகொள்ளவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் முன்னணியின் முதலாவது மாநாடு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாம் தேர்தலில் தோல்வியடைந்தாலும் மக்களின் வாக்குகளை வெற்றிகொண்டுள்ளதாக எமக்கு அறியப்படுத்தியது பெண்கள்தான். தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்துகொள்ளவில்லை.
அதனால்தான் இந்த ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பெண்களை ஏமாற்றுவது சிறந்தது அல்ல. பெண்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினால் அதுதான் அவரின் இறுதிக்காலம். இது உங்களுக்கு புரிந்ததா? அரசாங்கம் பொய் வாக்குறுதி வழங்கினால் அரசாங்கத்திற்கு இந்த நிலைமையே ஏற்படும்.
எமது நாட்டு பெண்களுக்கு இடமளிக்கும் கட்சியொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். இப்போது இந்த கட்சியில் அதிகம் பணிபுரிவது யார்? பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.
நான் சென்று பாரத்தபோது பசில் உடன் பெண்களே சூழ்ந்திருந்தனர். நேரடியாக கூறுவதாக இருந்தால் சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.