புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்பாடு கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அப்பகுதியை ஊடுறுத்து வீசிய கடும் காற்று காரணமாக ஐந்து வீடுகள் பகுதியளவிலும் அமைக்கப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
மேலும் மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது எவ்வித உயிர் தேசங்களும் ஏற்படவில்லை எனவும் த்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன் காரணமாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.