பிலிப்பைன்ஸில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 5 தசம் 8 ரிக்டர்களாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் இந்த நிலநடுக்கதினை தொடர்ந்து, யு.எஸ.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அண்மைக்காலமாக இந்தோனேசியா, ஐப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.