நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கையர்களுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை, கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிப் போட்டி இடம்பெற்றிருந்தது.
இதன் போது களத்தடுப்பில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கேக் வெட்டி தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
கேன் வில்லியம்சனின் இந்த செயலானது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், பல வீரர்களும் இந்த செயலுக்காக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.