பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவரசர் ஹரி-மேகன் தம்பதி தற்போது வின்ட்சர் கேஸ்டல் (Windsor Castle) பகுதியிலுள்ள ஃப்ரொக்மோர் கொட்டேஜ் (Frogmore Cottage) இல் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெல்ஸ் போர்டர்ஸ் Welsh Borders எல்லைகளுக்கு அருகே ஹரிக்கு சார்லஸ் நிலம் ஒதுக்கியதாகவும், ஹியர்போரட்ஸ்ரையர் (Herefordshire) இல் உள்ள சொத்துகளை எடுத்துக்கொள்ளுமாறு இளவரசர் சார்லஸ் விடுத்த கோரிக்கையை ஹரி நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், ஹரி அதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை எனவும், அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறவுள்ளமை காரணமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக ஹரியின் நண்பர்கள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகனின் சொந்த நகரமான Los Angeles இற்கு ஹரி குடும்பத்துடன் இடம்பெயரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன், இளவரசர் ஹரி-மேகன் தம்பதிகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.