பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும் இரகசியமான மறையிலவ் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சிமளித்து அங்கிருந்து வெளியேறிய பின்னர் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை நிலைமைகள் கட்சிக்குள் காணப்படும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்தும் மிக்கதாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.