பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரின் காற்று காரணமாக, மரக்கிளை முறிந்து வீழ்த்ததில் இருவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் கதிர்காமத்தில் நடந்துள்ளது. மாணிக்க கங்கைக்கு அருகில் இருந்த மரக்கிளைமுறிந்து குளித்துக் கொண்டிருந்த இருவர் மீது விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், இருவர் காயமடைந்து கதிர் காமம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.