தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் களுத்துறை டவுன் கிளப் அணி சார்பில் விளையாடிய பிரதமரின் இளையமகன் அப்போட்டியில் தாம் முகங்கொடுத்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது
கடற்படைக்கு எதிரான குறித்த போட்டியில் களுத்துறை விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவர் களமிறங்கினார்.
பிரதமரின் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷ தற்போது துபாயில் இருப்பதாகவும், மூத்த மகனான நாமல் ராஜபக்ஷ இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியைக் கண்டு களிப்பதற்காக அங்கு செல்ல உள்ளதாகவும் விளையாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.