தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை முயற்சிக்கான சூழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது மதூஸானின் சட்டத்தரணிகள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூஸ் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 5ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் 90 நாட்களுக்கு அவரை தடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பில் உள்ளமையினால் அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரியமை குறிப்பிடத்தக்கது.