பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளவர் முகின் ராவோ.
இவர் மலேசியாவை சேர்ந்தவர் என்ற நிலையில், தற்போது அபிராமியை வனிதா தூண்டி விட்டமையினால் இவரது ரசிகர் பட்டாளம் வனிதா மற்றும் அபிராமி மீது உச்ச கட்ட வெறுப்பில் உள்ளது.
இவர் ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். ஆனால் தற்போது மிகவும் கேபப்படுகிறார்.
பலகையை உடைப்பது, நாற்காலியை தூக்கி அடிப்பது என மோசமாக செயலில் ஈடுப்பட்டு வருகிறார். அவருக்கு நெருங்கியவர்கள் முகெனின் கோபம் இது சின்னது என கூறியுள்ளனர்.
எனினும் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் முகின் தப்பானதற்கு கோபப்படவில்லை எனவும், அவரது பலவீனத்தை மற்றவர்கள் குறிப்பாக வனிதா மற்றும் அபிராமி ஆகியவர்கள் பயன்படுத்துகிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
