பால்நிலை சமத்துவம் தொடர்பில் திருகோணமலையில் இன்று செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட சமூக அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் அகம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் சுமார் 40க்கும் மேற்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கிராம மட்டங்களில் பெண்கள் மத்தியில் ஏற்படும் பால்நிலை சம்பந்தமான பிரச்சனைகளை கையாள்வதில் ஒரு முகத்தன்மையினை உறுதிப்படுத்தும் முகமாகவே இச்செயலமர்வு இடம்பெற்றது.
இதன் போது சமூகத்தில் காணப்படும் பால்நிலை வேறுபாடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள், மற்றும் தராதரங்கள் பற்றி விசேட வளவாளர்களாக தெற்காசிய சமூக நீதிக்கான சட்டத்தரணிகளின் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தினார்கள்.
இக்கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், அகம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.