மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை மேல் நோக்கித் வளைத்துத் தூக்கிய நிலையில் மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
அவரவர் உடல் வளையும் தன்மைக்கேற்ப படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு இந்த நிலையினைப் பயிற்சி செய்யலாம்.
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
பாம்பு இருக்கை நன்மைகள்
பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த நிலை தரும். பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
பாம்பு இருக்கை (புஜங்காசனம்) நமது வயிற்றுப்பகுதி முழுவதையும் தூண்டுகிறது. இதனால் நமது ஜீரண மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கலை நீக்க ஒரு சிறந்த நிலை.
முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். முகுகெலும்பை பலப்படுத்தும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.
ஒகக்கலை மருத்துவத்தில் இந்த நிலை Slipped disc என சொல்லப்படும் முதுகெலும்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வாக உபயோகப்படுத்தப்படுகிறது.
அதிக வேலைப் பளுவினால் உண்டாகும் முதுகு வலி கழுத்துப்பிடிப்பு கூன் முதுகு நுரையீரல் அலர்ச்சி ஆஸ்த்துமா முதலியவற்றிற்கு நன்கு பலனளிக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
குறிப்பு :
கர்ப்பிணிப் பெண்கள் இந்த இருக்கையை செய்யக் கூடாது.
உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செய்யக்கூடாது.
நன்றி.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.