39 வயதாகும் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு இவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. சம்பளமும் அதிகமானது.
சாஹோ திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வந்ததும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
அமெரிக்க தொழில் அதிபரின் மகளை மணக்க இருப்பதாக கூறப்படுவதுடன், ஓரிரு மாதங்களில் நிச்சயதார்த்தத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட இறுதியில் பிரபாஸ் திருமணம் நடக்கும் என்று அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.