இங்கிலாந்திலுள்ள விடுதி ஒன்றில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவாமி முஸ்லீம் லீக் கட்சியின் லண்டன் பிரிவுத் தலைவர் சலீம் ஷேக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அவாமி முஸ்லீம் லீக்கின் தலைவரும் ரயில்வே அமைச்சருமான ஷேக் ரஷீத் அஹமத், அண்மையில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார்.
இந்நிகழ்வுகளை முடித்து விட்டு விடுதியில் இருந்து வெளியே வருகைதந்த போது இருவர் அவரை வழிமறித்து முட்டைகளை அவர் மீது வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் லண்டன் பிரிவைச் சேர்ந்த ஆசிப் அலி கான் மற்றும் சமா நாஸ் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில், தங்களது கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவைத் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வருவதால், ஷேக் ரஷீத் அஹமத் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.