நோர்வேயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் அமைந்துள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பெண்ணொருவர் சந்தேக நபரின் வீட்டில் இறந்து கிடந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 20 வயது மதிக்கத்தக்க நோர்வே குடியுரிமையுடையவர் என தெரிவித்த பொலிஸார், அந்த நபர் உறவினரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பள்ளிவாசல் மீதான தாக்குதலின்போது அந்த நபர் தனியாக செயல்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் 75 வயதான சபை உறுப்பினர் என பள்ளிவாசலின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.