யாழ்ப்பாணம் பளை முல்லையடிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பனை வெல்ல உற்பத்தி நிலையத்திற்கான நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு ரூ.25 லட்சம் பெறுமதியான புதிய மோட்ட கிரைன்டர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி குறித்த மோட்ட கிரைன்டரை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் கையளித்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

