இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரட்டுக்களை கடத்திய ஒருவர் சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் காலி, இமதுவ பகுதியைச் சேர்ந்த 33 வயது நிரம்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.40 மணி அளவில் டுபாயில் இருந்து வருகை தந்த விமானத்தில் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து டுபாயில் தயாரிக்கப்பட்ட 13,000 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 650,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும், கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read more