அமேசான் காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் பெரும்பான்மையான பல்வகைத்தன்மை யான உயிரினங்களை கொண்டதும், உணவுச்சங்கிலியில் பிரதான பங்கினை வகிப்பதுமான அமேசான் காட்டில் தற்போது பாரிய அளவிலான காட்டுத்தீ பரவி வருகிறது.
மனிதர்களால் தான் இந்த காட்டுத்தீ எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேசில் அரசாங்கம் இந்த தீயை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், அமேசன் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூவெலா உள்ளிட்ட 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன.
இந்த காட்டில் அரிய வகை மரங்கள், உயிரினங்கள், அபூர்வ விலங்கினங்கள், பூச்சிகள் உள்ள நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்னர் அமேசன் காட்டில் தீ பற்றியது. மள மளவென காட்டுத் தீ பரவியது. இதனால், பல கி.மீ. தூரத்துக்கு தீ பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும் உலக நாடுகளும் வலியுறுத்துகின்றன.