கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை முன்னிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகளை தடைசெய்வது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, மேலதிக வகுப்புகளை நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகள் குறித்த தினத்தில் இருந்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
அத்துடன், ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதிதரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.