திருகோணமலையில் அமைந்துள்ள வர்த்தக சம்மேளத்தில் (chamber of commerce) தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.
பரபரப்பாக இடம்பெற்றிருந்த இந்த தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கமைய திருகோணமலை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிக வாக்குகளை பெற்று மீண்டும் லிங்கநகரை சேர்ந்த கு. குலதீபன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், செயலாளராக திரு.பிரகாஷ் அவர்களும், பொருளாளராக திரு.சச்சிதானந்தம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
