நல்லூர்க் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கில் இராணுவ குவிப்புக்கள் தொடர்பிலான விமர்சினங்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். கைதுகள் நிறுத்தப்படாது. அத்துடன் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்த தேடுதல் நடவடிக்கைகளை எமது புலனாய்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் எமக்கு பல சவால்கள் உள்ளன. இனிமேல் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடவேண்டிய நிலைமை உள்ளது. இந்த எதிரிகள் யுத்த பூமியில் இல்லை. மக்களுடன் மக்களாக உள்ளனர். ஆகவே அவர்களை இனங்காணும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.