திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பிரதான மின் கம்பம் உடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியின் சாரதி தூக்கத்தில் மின் கம்பத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் லொறி க்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்குறிய பிரதான மின் கம்பம் உடைந்துள்ளதால் மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.