இந்தியா நெல்லை மாவட்டத்தில் சுமார் 5 தொன் எடையுள்ள திமிங்கலமொன்று உருக்குலைந்த நிலையைில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் உவரியில் அந்தோனியார் ஆலயம் அருகில் உள்ள கடற்கரையில் நேற்று பிற்பகலில் நேரத்தில் சுமார் 25 அடி நீளம் 5 தொன் எடையுள்ள திமிங்கிலம் கரை ஒதுங்கியது.
இந்த திமிங்கிலம் இறந்து பத்து முதல் 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும்,
கப்பலில் அடிபட்டோ அல்லது வேறு காரணங்களாலோ திமிங்கிலம் இறந்திருக்கக்கூடும் என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மீன் வளதுறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.