ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த நெருக்கடியும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்தரப்பினரே எமது கட்சிக்குள் பிளவு நெருக்கடி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அப்படி எந்தப் பிரச்சினையும் கட்சிக்குள் கிடையாது என்று தெரிவித்தார்.
இதேவேளை, எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும், எதிர்கால தேர்தல்களில் கட்சியின் நடவடிக்கை குறித்து அதன்போது திட்டமிடப்படும் என்றும் அவர் கூறினார்.