நீரழிவு நோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவு நேரத்திலும்)
- தோலில் அரிப்பு ஏற்படுதல்.
- கண் பார்வை மங்கலடைதல்.
- சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
- பாதம் மறத்துப்போதல்
- அதிகமான தாகம்.
- காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
- எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
- எடைகுறைதல்.
- தோல் வியாதிகள் ஏற்படுதல்.
- சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்த நிலையிலிருப்பது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும்.
- நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்புகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.
- நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, பக்கவாதம்(ஸ்ட்ரோக்) மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.
- கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் (வெண்புள்ளி)தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.
- சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படும்.
- ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
- சத்து குறைவு ஏற்பட்டு அது தொடர்பான நோய்கள் உருவாகும்.
- சைலண்ட் டெத் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
நீரழிவு நோயினைக் கையாளுதல்
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.
உடற்பயிற்சி – உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி திசரி காலை 1 மணி நேரம் செய்திடும் போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.