சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா நேற்று வியாழக்கிழமை கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.
ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசாரணைக்கு, சஹ்ரானின் மனைவி, அவரது ஏழு வயது மகள், மற்றுமொரு தற்கொலை குண்டுதாரியான இல்ஹாம் அஹமடின் தந்தையான யுசுப் மொகமட் இப்ராஹிம், அவரது சகோதரன் ஆகியோரும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.