சிலருக்கு கார் வாங்குவது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். அப்படி பட்டவர்கள் வீட்டில் கார் இருந்தாலும் கூட அடுத்து என்ன கார் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இருப்பர். நீங்கள் செல்வந்தராக இருந்தால் இந்த காரில் ஏதாவது ஒன்றை வாங்கி அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட கார் பிரியர்களுக்காக உலகின் மிக விலையுயர்ந்த டாப் 10 கார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஃபெராரி பினின்ஃபரினா செர்ஜியோ (Ferrari Pininfarina Sergio)
இந்த சூப்பர் ஃபெராரி காரில் இதுவரை ஆறு கார்கள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியின் போது முதன்முதலில் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.இது முன்னாள் தலைவரும் வாகன வடிவமைப்பாளருமான செர்ஜியோ பினின்ஃபரினாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஃபெர்ராரி 458 ஸ்பைடரை அடிப்படையாகக் கொண்ட செர்ஜியோ கார் பிரதியோகமாக வடிவமைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் தோராயமாக 23 கோடி ஆகும்.

2. மேன்சரி புகாட்டி வேய்ரான் விவேர் (Mansory bugatti veyron vivere)
உலகம் கண்ட அதிவேக கார்களில் ஒன்று மேன்சரி புகாட்டி வேய்ரான் விவேர். இது 8 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் கொண்டது. இது நம்மை வியக்க வைக்கும் அளவில் 1200 ஹெச்பி ஆற்றலை உருவாக்கி, மணிக்கு 406 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக 26 கோடி ஆகும்.

3. லைக்கான் ஹைப்பர்ஸ்போர்ட்(Lykan HyperSport)
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார், லைகான் ஹைப்பர்ஸ்போர்ட் ஆகும். இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு கத்தார் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 780 ஹெச்பி கொண்ட 3.7 லிட்டர் இரட்டை- டர்போசார்ஜ் செய்யப்பட்ட பிளாட்- சிஸ் எஞ்சினிக்கு சக்தியை கொடுக்கிறது. சிசர் டோர்ஸ் என்று அழைக்கப்படும் மேல்பக்கமாக திறக்கும் கதவுகளுடன் இந்த கார் உள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக 26 கோடி ஆகும்.

4. லம்போர்கினி சியான்(Lamborghini sian)
இது அவென்டடோர் எஸ்.வி.ஜேவிலிருந்து 6.5 லிட்டர் வி 12 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. புதிய 48 வோல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் எஸ்.வி.ஜே.யில் வி 12 எஞ்சின் 770 ஹெச்பி ஆற்றலை உருவாக்குகிறது. இதில் உள்ள மின்சார மோட்டார் 34 ஹெச்பி சக்திகளுடன் இணைந்து அதிகபட்சமாக 819 ஹெச்பி ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதுவே மிக சக்திவாய்ந்த லம்போர்கினியை உருவாக்குகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக 26 கோடி ஆகும்.

5. லம்போர்கினி வெனெனோ( Lamborghini Veneno)
2013 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட லம்போர்கினி வெனெனோவுக்கு 6.5 எல் 740 பிஹெச்பி வி 12 எஞ்சின் உள்ளது. லம்போர்கினி வெனெனோவை இயக்கிய 3 வினாடிகளுக்குள் இதன் வேகத்தை 0 விலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். இந்தக் கார் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உங்கள் மூச்சை நிறுத்திவிடும் சக்தி கொண்டது. மேலும் இது உலகின் மிக சக்திவாய்ந்த ஹைபர்கார்களில் ஒன்றாகும். இந்திய மதிப்பில் தோராயமாக 34 கோடி ஆகும்.

6. கோயினிக்செக் சி.சி.எக்ஸ். ஆர் ட்ரெவிடா (Koenigsegg CCXR Trevita)
இந்த காரின் மேல் பூச்சில் வைரம் கலந்திருக்கிறதாம். இதன் ஸ்வீடிஷ் தயாரிப்பாளர் கார்பனுடன் வைரதுகள் கலந்த பெயிண்ட்டை உருவாக்கி இருக்கிறார். இந்த விலையுயர்ந்த பபளபளக்கும் காரினுள் 4.8 லிட்டர் டூயல் சூப்பர் சார்ஜ் வி 8 இஞ்சின் 1004 குதிரை சக்தியுள்ள இஞ்சின் இருக்கிறதாம். இந்திய மதிப்பில் தோராயமாக 36 கோடி ஆகும்.

7. மெர்சிடிஸ்-மேபாக் எக்ஸெலெரோ (Mercedes-Maybach Exelero)
மெர்சிடிஸ்-மேபாக் எக்ஸெலெரோ காரில் 690 பிஹெச்பி இரட்டை- டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி 12 எஞ்சின் ஒரு அதிவேக செயல்திறன் கொண்டது. இது 4.4 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மற்றும் மணிக்கு 349 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இது அதிநவீன ஆடம்பர கார் ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக 61 கோடி ஆகும்.

8. புகாட்டி சென்டோடிசி (Bugatti centodieci)
புகட்டி நிறுவனத்தின் சக்திவாய்ந்த காரான புகாட்டி சிரோனை விட அதிக சக்தி வாய்ந்ததாகமும் அதிக விலையுயர்ந்ததாகவும் புகாட்டி சென்டோடிசி இருக்கிறது . இந்த காரில் 8 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் 1,600 ஹெச்பி உற்பத்தி செய்கிறது. இந்த கார் 2.4 வினாடிகளில் மணிக்கு 0 விலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இந்த கார் மணிக்கு 378 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.இந்திய மதிப்பில் தோராயமாக 68 கோடி ஆகும்.

9. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வெப்டைல்(Rolls-Royce Sweptail)
இத்தாலி நாட்டில் தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்ற கார் கண்காட்சியில் ரோல்ஸ்-ராய்ஸின் ஸ்வெப்டெய்ல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை சூப்பர் யாச் அதிவேக படகு தயாரிப்பாளரும் விமான நிபுணரும் சேர்ந்து 2013 இல் வடிவமைத்துள்ளனர். 6.75 லிட்டர் வி 12 பவர் டிரெய்ன் 453 பிஹெச்பி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வெப்டைல் ஒரு ஆடம்பர கார் ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக 99 கோடி.

10. புகாட்டி லா வொய்சர் நொயர்(Bugatti La Voiture Noire)
புகாட்டி லா வொய்சர் நொயர் கார் மணிக்கு 380 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இது 0 வில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டும். இந்த சூப்பர் காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 8 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 1600 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் திறன் கொண்டது. புகாட்டி லா வொய்சர் நொயர் உலகின் மிக விலையுயர்ந்த கார் ஆகும். புகாட்டி நிறுவனம் இந்த சூப்பர் காரை அடுத்த ஆண்டில் தான் அதன் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக 146 கோடி ஆகும்.
