திருமலை நிலாவெளி பகுதியில் சற்று முன்னர் விபத்து ஏற்பட்டுள்ளது.
நிலாவெளி பிள்ளையார் ஸ்டோரிற்கு முன்னால் இந்த விபத்து நடந்துள்ளதாக அங்கிருந்த வரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முச்சக்கரவண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த முச்சக்கரவண்டியானது 8 ஆம் கட்டையை சேர்ந்த 15 வயதடைய சிறுவன் ஒருவரால் செலுத்தப்பட்டுள்ளதாக பிரேதவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அனுமதிப்பத்திரம் இல்லாமலும், 18 வயதிற்கு கீழுள்ள ஒருவருக்கு வாகனத்தை செலுத்த அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே பெற்றொர்களே, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது உங்கள் கடமை, சிறுவர்களுக்கு வாகனத்தை வீதியில் முறையான பயிற்சி இல்லாமல் ஓடக் கொடுப்பதாலும், அல்லது உங்களுக்கு தெரியாமல் வாகனங்களை செலுத்துவதாலும், உங்கள் பிள்ளையின் உயிர்மட்டுமல்ல வீதியில் செல்வோரின் உயிர்களும் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.
