நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வோம். வெற்றிபெற்ற பின்னர் ஜனாதிபதி முறைமை குறித்து முடிவுசெய்வோம் என்பதே இன்றைய அமைச்சரவையில் கலந்துகொண்ட பலபேருடைய கருத்தாக அமைந்ததாக சொல்லப்படுகின்றது.
அதேவேளை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டதன் பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை இல்லாதொழிக்கும் யோசனை குறித்து ஆராய்வதானது வெட்கக்கேடான விடயமாகும் என்று கூறினார்.