சுகாதாரத் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை மீள்பரீசீலினை செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டம் 2 ஆவது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
யாழ். சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்து வழங்குமாறு கோரி நேற்று காலை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த புறக்கிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் கலந்து கொண்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு இன்று காலை 9.30 மணிக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு நியமனம் வழங்குவதை நிறுத்தி மீள் பரிசீலனை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.