நாளைய தினம் 28.02.2021 ஞாயிற்றுக் கிழமை 306B2 மற்றும் 306C1 மாவட்ட லயன்ஸ் கழகங்கள் இணைந்து கீழ்வரும் விடயங்கள் அடங்கிய பாரிய இலவச செயற்றிட்டம் ஒன்றினை உட்துறைமுக வீதியிலுள்ள கலாச்சார மண்டபத்தில் முன்னெடுக்க உள்ளனர்.
1. திருகோணமலை கடற்கரையினை சுத்தம் செய்யும் சிரமதானம்
2. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உடைகள் கையளிப்பு
3. இலவச கண் பரிசோதனைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல்
4. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்குதல்
5. மரம் நடுகை செயற்றிட்டம்
6. இலவச நீரிழிவு நோய் சோதனைகள்
இந்த செயற்றிட்டங்களுக்கு பல நிறுவனங்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் இணை அனுசரணை வழங்குகின்றனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு சேவைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்கு கொள்பவர்கள் சுகாதார விதிமுறைகளைப் இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.