இங்கு பலபேருக்கும் இருக்கும் சந்தேகம், நாமும் இறைவனும் ஒன்று என்று கூறுகிறார்களே நம்பத்தான் முடியவில்லை என்பது,
தத்வமஸி என்றால் என்ன என்று தெரியுமா?
எல்லா பொருட்களும் அணுக்களின் கூட்டுதான். அணுவால் இணைந்ததுதான் எல்லா பொருட்களும். எல்லாமேஒன்றுதான். சிவம் என்ற ஆதிநிலையே என்று உணர்ந்தார்கள்.அதற்கு தத்வமஸி
என்று பெயர் சூட்டினார்கள்.
அகம் பிரம்மாஸ்மி என்றால் என்ன தெரியுமா?
பிற்காலத்தில் சித்தர்கள்
அகத்தவம் புரிந்து மனமே, புற மனதிலிருந்து நடு மனம் சென்று அங்கிருந்து ஆழ் மனது சென்று
இறை நிலையோடு ஒன்றி அவனேதான் அறிவாக இருக்கிறான் என்றறிந்தபோது
அகம்பிரம்மாஸ்மி என்று சொன்னார்கள்.
இறைவனே தான் தன்மாற்றம் பெற்றுக் கொண்டு ஓரறிவு முதல் ஐந்தறிவாகி பரிணாமச் சிறப்பாக இறுதியில் ஆறறிவு மனிதனாக இருக்கிறான்.
மகரிஷி அடிக்கடி கூறுவார் :
God + Impurities = Man
Man – Impurities = God
இது என்னவென்று புரிகிறதா
இப்போது “நானே இறைவனாக இருக்கிறேன்” என்று சொன்னால் இந்த சிறிய ” நான் ” (The little self) தன்முனைப்பாக இருக்கிறது.
இறைவனே நானாக இருக்கிறேன்” என்று சொல்லும் போது தன்முனைப்பு எழவே எழாது. இந்த சிறிய ” நான் ” முழுவதுமாக அற்றுப் போகும்.
மகரிஷியின் கவி ஒன்று உள்ளது :
பழுத்த நிலை வரும்
வரையில்
நான் நீ என்போம்
பதமடைந்தோம் ஒன்றானோம்
பரமானந்தம்,,,,
இது ஆரம்பம்தான்.மனதில் போட்டு அசை போடுங்கள். உங்களுக்கே தெளிவு பிறக்கும்
இறையே குருவே சரணம்….