களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் மற்றும் அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து சம்பவவித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விபத்தில் காயமடைந்த 52 பேரும் களுத்துறை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
43 ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
