நாட்டில் மேலும் 113 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இவர்களில் ஐவர் தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்தவர்கள் என்பதோடு மற்றவர்கள் மினுவங்கொட கொத்தணியுடன் தொடர்பு வைத்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது.