நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், விரும்பியோ விரும்பாலோ பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
நோய் பரவும் விதத்தில் திருமண நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.