நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனைக் கைது செய்ய 6 பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளை தேர்தலுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகிறது.
இதற்கமைய ரிஸாட் பதியூதீனைக் கைது செய்வதற்கு நேற்று நீதிமன்ற அனுமதியை பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு, 6 குழுக்களை அமைத்தது.
புத்தளம், கொழும்பு மற்றும் மன்னாரிலுள்ள அவரது வீடுகளுக்கு இந்த பொலிஸ் படை அனுப்பிவைக்கப்பட்டது.
எனினும் அவர் தற்சமயம் வரை கைது செய்யப்படவில்லை.
அவரது கையடக்கத் தொலைபேசியும் தற்போது பயன்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.