ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க அவர்கள் சற்று முன் மரணமடைந்தார்.
கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.