இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் படகுகளில் மீன் பிடிக்காமல் கரை திரும்பியிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதை நிறுத்துமாறு இலங்கை கடற்படை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.