நடிகையின் உடல் நிறத்தை மாற்றுவதற்காக ஊசி மருந்தொன்றை தருவதாக கூறி, பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மருத்துவர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக நாராஹேன்பிட்டி பொலிஸார் , கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நாராஹேன்பிட்டி இசிபத்தன மாவத்தை, கிறீன்லேண்ட் அவனியூ பிரதேசத்தில் உள்ள சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் கொரேதொட்டகே லியனகே விக்ரமரத்ன என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரான மருத்துவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த பெண் தனது உடல் தோல் நிறத்தை மாற்ற ஊசி மருந்தை பெற்றுக்கொள்வதற்காக இணையத்தளத்தில் தேடிய போது, இந்த மருத்துவரின் சிகிச்சை நிலையம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
இந்த சிகிச்சை நிலையத்தில் உடல் தோல் நிறத்தை மாற்றும் ஊசி மருந்து 10 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையான விலையில் கிடைக்கும் என்பதை குறித்த பெண் அறிந்துக்கொண்டுள்ளார்.
ஊசி மருந்து விலை அதிகம் என அந்த பெண் சந்தேக நபரான மருத்துவரிடம் கூறியுள்ளதுடன் அதற்கு கிரீம் ஒன்று உள்ளது அதனை தருகிறேன் எனக் கூறி, சிகிச்சை நிலையத்தின் மேல் மாடிக்கு பெண்ணை அழைத்துச் சென்ற சந்தேக நபர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சந்தேக நபரான மருத்துவர் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
நன்றி : https://am.lk/2014-05-29-09-30-04/item/56831-2021-02-25-06-48-41