ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக விரைவில் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் தனது பாதுகாப்பு அமைச்சிற்கு கீழ் கொண்டுவரப்பட்ட ரூபவாஹினியில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பழைய சில பாடல்களை பாடி அசத்தவுள்ளதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரி மோது மேடைகளிலும் பாடல்களை பாடி தனது திறமையை காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.